Tuesday, January 21, 2014

விநாயக முருகனின் "ராஜீவ் காந்தி சாலை" - ஒரு பார்வை.

நான் அதிகம் எழுதுவபன் அல்ல. இன்னும் சொல்ல போனால் எழுதுபவனே அல்ல. அதனால் தான்  என்னவோ வாசிக்க நேரம் கிடைக்கிறது.

இந்த புத்தக கண்காட்சியில் விநாயக முருகனின்((VM) "ராஜீவ் காந்தி சாலை" மற்றும் சில புத்தகங்களும் வாங்கி படிக்க துவங்கினேன்.  இது சாருவால் வந்த வினை. I think i took the bait. அந்த சண்டை இல்லாமல் இருந்திருந்தால் இதை வாங்கி இருக்க மாட்டேன்.

சாரு தரமற்ற வார்த்தைகளினால் இவரை திட்டியது தவறு என்பதில் எனக்கு எந்த இய்யபாடும் இல்லை. அனால் இந்த புத்தகத்தை (இவரை அல்ல) இதை தவிர வேறு எப்படியும் திட்டி இருக்க முடியாது. எந்த ஒரு வகையிலும் சேர்க்க முடியாத வகையில் மிக திறமையாக உள்ளது இந்த நொவெலின் பாணி. முடிந்தால் VM என்ன சொல்ல வருகிறார், அது என்ன பாணி என்று அவர் தனி புத்தகமாக போடலாம். விளங்கும்.

சில கதாபாத்திரங்களின் பார்வையில் அந்த சாலை எப்படி இருந்தது, எப்படி இருக்கிறது என்று ஒரு 70 பக்கம். பின் பழனி என்ற கதாபாத்திரம் பழைய தினத்தந்தி, தினமலர் போன்றவற்றில் வரும் கள்ளகாதல் செய்திகள், செவி வழி கிசுகிசு, ஜூவி, குமுதம், நக்கீரன் எல்லாம் பக்கங்களை நிரப்பும் செய்திகள் எல்லாவற்றயும் தொகுத்து ஒரு 50 பக்கம். இடையில் கொஞ்சம் "மலையாளிகளையும்" " பாபான்களையும்" ஒரு முன்வன்மத்தோடும், சில முன் முடிவுகளோடும், ஒரு 10 பக்கம். இது போக மானே தேனே எல்லாம் காதலின், காமத்தின், வாழ்கையின் வாதை, வலி என்று பக்க நிரப்பல்கள். இத எதுவும் மனதில் ஒட்டவே இல்லை. காரணம் எந்த கதை மாந்தரும் நம் மனதில் பதிய மறுக்கிறார்கள். Character establishment is pathetic.

உண்மையில் இதனை முழுமையாக படிக்க அசாத்திய பொறுமை வேண்டும். கதையில் வரும் யாரும் ஒரு வாசகனுக்கு /அவன் மனதில்  எந்த பாதிப்பும் ஏற்படுத்திவிட கூடாது என்று மிக கவனமாக எல்லா கதாபாத்திரத்தையும் மிக மொக்கையாக சித்தரித்துள்ளார் .

இது எல்லாவற்றையும் விட இந்த IT துறையே இப்படித்தான் என்பது  போன்ற ஒரு தவறான பிம்பத்தை இவர் கட்டியமைக்க முயல்வது தான் என்னால் மன்னிக்க முடியாதது. இவர் ஜாதியை பேசும் இடங்களில் கூட அது சம்பந்தமான கேள்விகளை முன்வைபதில்லை இவரது எழுது. சும்மா ஒரு "இதுக்கு" திட்டி வைப்போம் என்ற அளவில் தான் அதையும் கையாண்டிருக்கிறார். அதையும் balance செய்வதற்கு "சௌம்யா" என்ற கதாபத்திரம்.

இன்றைய சில தமிழ் இயக்குனர்களை போல் "டாஸ்மாக்" ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிறது இன்றைய இலக்கியத்தில்!!. தவறில்லை. பக்கங்களை நிரப்ப முடிவு செய்த பிறகு " கிளாஸ் கழுவுவது முதல், வாந்தி எடுப்பது வரை" விவரிக்கலாம்.

இத்தனை பக்கங்கள் எழுதி உள்ளார் என்பது தாண்டி இவரை இந்த புத்தகத்திற்காக பாராட்ட இயலாமைக்கு மன்னிக்கவும். அதற்க்கு காரணம் (என்னளவில்) கொஞ்சமும் Depth இல்லாத அவரது எழுத்து நடை.

இதனை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றால் - நானும் அதே சாலையில் 2000 ஆண்டு  முதல் தினமும் சென்று வருகிறேன். இவர் கண்ட காட்சிகளில்  பலவற்றை நானும் பார்த்திருக்க கூடும். இதே துறைதான். எல்லாவற்றிற்கும் மேல் இதனை வாங்கி அதை படித்தும் முடித்திருகிரேன் .

கோவில் மிருகம் நன்றாக இருந்தது.

ராஜு ராமஸ்வாமி

Friday, June 29, 2012

2 ஆண்டுகலுக்கு பிறகு இன்று மீண்டும் இதனை தொடங்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கிரேன். இதனை எனது முகநூளிலும் இடலாம் என்று இருக்கிறேன். உண்மையில் இப்போது வாழ்வின் மீது பெரிதான ஆக்கரை தோன்றுகிறது!!!!!. நான் சொல்ல துடித்தும் சோம்பேறித்தனம் மட்டுமே காரணமாகி சொல்லாமல் போன எல்லாவற்றையும் சொல்லவேண்டும் இனி....

வழக்கு என் 18/9 நன்றாக இருந்தது....
அன்னா ஹசாரஎ என்ன ஆனார்.....
கம்யுனிசம் என் பார்வையில்.....
பெண் விடுதலை.....
மிக முக்கியமாக...

இன்று பிட்சைகாரர்களாய் வாழ்ந்து பணக்காரர்களாய்  சாக துடிக்கும் என் நண்பனிடம் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும்..........

இப்படி பல....


முக்கியமாகவோ.. முக்காமலோ
இனி இதில் தொடர்ந்து எழுத போகிறேன்.

சேஷா ஒரு பாட்டு எழுதியதற்கு முகநூளில் லிங்க் மட்டும் கொடுக்க முடிந்தது.

அதன் விமர்சனம் விரைவில்.....

இன்னும் நானும் எழுதி ஒரு பதிவராக ஆயிடுவோம்...... தமிழ்  எதெல்லாமோ தாங்குது.... இத தாங்காதா.....

ராஜு ராமஸ்வாமி....

Sunday, May 23, 2010

பிறப்பின் சூழ்ச்சி

எல்லா பிறப்பும்
சில வரங்கலோடும்
சில சாபங்கலோடும்
ஏற்படுகிறது

நீ காதலிப்பதும்
காதலிக்கபடுவதும்
வரம்கலாகிறது

என்றேனும் ஒரு நாள்
உன் காதல்
மறுக்கப்படுகையில்
நீ சாபங்கள் இன்றி
பிறந்திருக்கலாம்
என்றும்
உன் காதல் மரிக்கையில்
நீ வரங்களே இன்றி
பிறந்திருக்கலாம் என்றும்
தோன்றும்

என் செய்ய
எல்லா பிறப்பும்
சில வரங்களுடனும்
சில சாபங்களுடனும்
ஏற்படுவதாகிறது

Saturday, May 22, 2010

வாழ்வாங்கு வாழ்வதாயின்....

எல்லா கடற்கரை நடையின் முடிவிலும்
நீளமாய் காலம்
நம்முன் நீண்டு போகும்.....................
மணல் மட்டும் மிஞ்சும் கடற்கரை!

என் ஊர்
அநாதை கிராமம்...............
என் தோட்டத்து மாமரம்
பழுத்து குலுங்குகிறது.
யாருக்கும் இல்லாமல்.................

அமைதியாய்
அனால் கடுமையாய் காடு.
கத்தும் காக்கை
உடைத்துப்போட்டது.
சிதறி அழும் மலை..................

சிதறிய துளிகளை
சேர்த்து வந்து அடிக்கி
வீடென்று சொன்னோம் நாம்!!!!!

கைகளை அடித்து விரித்து
அலைந்து திரியும் தும்பி.
யாரும் பிடித்து விடாதீர்கள்..........
அது மட்டும் தான் அங்கு உள்ளது!

வேனல்கால கனவுகள்.........
புதைந்து கிடக்கிறது..............!
தோண்டி எடுக்கத்தான் யாருக்கும் நேரமில்லை!!

காலசுழற்சியில்
அமைதியாய் அரை நொடி அழவேண்டும்
நேரம் இல்லை அதற்கும்!

என் கிராமத்து காதலர்கள்
பேசும் மௌன மொழிகளில்
ரத்தம் சொட்ட சொட்ட
மரித்துபோகிறது
செம்பரித்தி.................
யாருக்கும் சொல்லாமல் !

நானும் நீயும்
இங்கு வாழ்வாங்கு வாழ்கிறோம்!!!!!!!!!!!!!

Thursday, May 20, 2010

கனவுகள் நேரம்

இன்று கனவுகள் காணும் நேரம்
இருள் பிரிந்தும் பிரியாத
நீள் சாலை வெளியின்
பனிபோர்வை விலக்கும்
சூரியன்

நேற்றின் நிகழ்வுகளில்
வழிந்து போன வியர்வையின்
மிச்சம் சேகரிக்கும்
போர்வை

எழதுடிக்கும் மனமும்
சம்மதியா மனைவியின் கையும்
மின்விசிறியின் சுழற்சியில்
சிக்கி மரிக்கும் காலம்

கடந்து போகக்கடவது
எல்லாம் எப்போதும்

இறந்து நின்றது காலம்
விழிக்கவேயில்லை இன்னும் நான்

இது கனவுகள் காணும் நேரம்

Wednesday, April 28, 2010

இனி கவிதை காலம்.........

(அப்போது பள்ளிகல்வி முடிந்த சமயம். வீட்டில் பெரிதாக வேலை இருந்தாலும் ஒன்றும் பார்க்காத காலம். கமயுனிசம் - ஹிந்துத்வா என்று இரண்டுக்கும் இடையில் நேரம், பணம் - இல்லாமல் செலவழித்த காலம். இன்று மனம் மாறி போனது வேறு கதை. அனால் அப்போது நிறைய கவிதை கிடைத்தது என்னிடமிருந்து எனக்கே. 1997ல் எழுதிய கவிதை - ஒன்றும் பெரிதாக மாறவில்லை).

புரட்சி
இந்த நூற்றாண்டின் இறுதி புரட்சி.......
நடந்து முடிந்தது.

பூமி இரத்தத்தால் சிவந்து
குருதி வாடை குடல் குமட்டியது
அழுகிய பிணங்களை அள்ளி போட ஆள் இல்லை.....

ஆண்டுகள் கடந்து மனித இனம் மாறி இருந்தது

இனி இங்கே
முல்லை தேர் துறக்கும்
மயில் போர்வை மறுக்கும்
யாசகம் பெறுவது அசிங்கம் என்று எண்ணி
திருவோடுகள் தீ குளிக்கும்

வழி தவறிய கோவலனை
கண்ணகி விவாகரத்து செய்வாள்
மாதவிகள் கோவலனை கொலையும் செய்வர்.
கொலையும் செய்வாள் - தாசி

கம்ப ராமாயணமும் மணிமேகலையும்
திருக்குறளோடு சேர்த்து
வலைதளங்களில் சங்கம் முழங்கும்

அதிகாலை கழுதைகள் சுமை மறுக்கும்
மீறி ஏற்றினால் பள்ளிகள் எரிக்கப்படும்

இங்கு
மாசற்றதாய் காற்று
மழைத்துளி போல் நீர்
மரிக்காத மண்
மறந்து போன மதங்கள்.

நினைத்து பார்கையில்
நெஞ்சமெல்லாம் சுகானுபவம்.

விழித்து பார்கையில்.....................................
பாரதி சொல்கிறான்
" கனவு மெய்பட வேண்டும் "
அவன் இறந்து எழுபத்தாறு ஆண்டுகள்............

Thursday, December 31, 2009

உயிர்த்து உயர்ந்து
உதிர்ந்து உலர்ந்து போன பின்னும்
எதையோ தொலைத்து
அதன் சுவடு தேடும் மழையும் மனிதமும்.......

அதை தேடி எடுத்து
உலகுக்கு உரைக்கும் எத்தனிப்பிலேயே
இறந்து போவது தான்
இயற்கை செயற்கையாய் நிகழ்த்தும்
மழையும் மனித மரணமும்.......