Wednesday, April 28, 2010

இனி கவிதை காலம்.........

(அப்போது பள்ளிகல்வி முடிந்த சமயம். வீட்டில் பெரிதாக வேலை இருந்தாலும் ஒன்றும் பார்க்காத காலம். கமயுனிசம் - ஹிந்துத்வா என்று இரண்டுக்கும் இடையில் நேரம், பணம் - இல்லாமல் செலவழித்த காலம். இன்று மனம் மாறி போனது வேறு கதை. அனால் அப்போது நிறைய கவிதை கிடைத்தது என்னிடமிருந்து எனக்கே. 1997ல் எழுதிய கவிதை - ஒன்றும் பெரிதாக மாறவில்லை).

புரட்சி
இந்த நூற்றாண்டின் இறுதி புரட்சி.......
நடந்து முடிந்தது.

பூமி இரத்தத்தால் சிவந்து
குருதி வாடை குடல் குமட்டியது
அழுகிய பிணங்களை அள்ளி போட ஆள் இல்லை.....

ஆண்டுகள் கடந்து மனித இனம் மாறி இருந்தது

இனி இங்கே
முல்லை தேர் துறக்கும்
மயில் போர்வை மறுக்கும்
யாசகம் பெறுவது அசிங்கம் என்று எண்ணி
திருவோடுகள் தீ குளிக்கும்

வழி தவறிய கோவலனை
கண்ணகி விவாகரத்து செய்வாள்
மாதவிகள் கோவலனை கொலையும் செய்வர்.
கொலையும் செய்வாள் - தாசி

கம்ப ராமாயணமும் மணிமேகலையும்
திருக்குறளோடு சேர்த்து
வலைதளங்களில் சங்கம் முழங்கும்

அதிகாலை கழுதைகள் சுமை மறுக்கும்
மீறி ஏற்றினால் பள்ளிகள் எரிக்கப்படும்

இங்கு
மாசற்றதாய் காற்று
மழைத்துளி போல் நீர்
மரிக்காத மண்
மறந்து போன மதங்கள்.

நினைத்து பார்கையில்
நெஞ்சமெல்லாம் சுகானுபவம்.

விழித்து பார்கையில்.....................................
பாரதி சொல்கிறான்
" கனவு மெய்பட வேண்டும் "
அவன் இறந்து எழுபத்தாறு ஆண்டுகள்............