Saturday, May 22, 2010

வாழ்வாங்கு வாழ்வதாயின்....

எல்லா கடற்கரை நடையின் முடிவிலும்
நீளமாய் காலம்
நம்முன் நீண்டு போகும்.....................
மணல் மட்டும் மிஞ்சும் கடற்கரை!

என் ஊர்
அநாதை கிராமம்...............
என் தோட்டத்து மாமரம்
பழுத்து குலுங்குகிறது.
யாருக்கும் இல்லாமல்.................

அமைதியாய்
அனால் கடுமையாய் காடு.
கத்தும் காக்கை
உடைத்துப்போட்டது.
சிதறி அழும் மலை..................

சிதறிய துளிகளை
சேர்த்து வந்து அடிக்கி
வீடென்று சொன்னோம் நாம்!!!!!

கைகளை அடித்து விரித்து
அலைந்து திரியும் தும்பி.
யாரும் பிடித்து விடாதீர்கள்..........
அது மட்டும் தான் அங்கு உள்ளது!

வேனல்கால கனவுகள்.........
புதைந்து கிடக்கிறது..............!
தோண்டி எடுக்கத்தான் யாருக்கும் நேரமில்லை!!

காலசுழற்சியில்
அமைதியாய் அரை நொடி அழவேண்டும்
நேரம் இல்லை அதற்கும்!

என் கிராமத்து காதலர்கள்
பேசும் மௌன மொழிகளில்
ரத்தம் சொட்ட சொட்ட
மரித்துபோகிறது
செம்பரித்தி.................
யாருக்கும் சொல்லாமல் !

நானும் நீயும்
இங்கு வாழ்வாங்கு வாழ்கிறோம்!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment