Sunday, May 23, 2010

பிறப்பின் சூழ்ச்சி

எல்லா பிறப்பும்
சில வரங்கலோடும்
சில சாபங்கலோடும்
ஏற்படுகிறது

நீ காதலிப்பதும்
காதலிக்கபடுவதும்
வரம்கலாகிறது

என்றேனும் ஒரு நாள்
உன் காதல்
மறுக்கப்படுகையில்
நீ சாபங்கள் இன்றி
பிறந்திருக்கலாம்
என்றும்
உன் காதல் மரிக்கையில்
நீ வரங்களே இன்றி
பிறந்திருக்கலாம் என்றும்
தோன்றும்

என் செய்ய
எல்லா பிறப்பும்
சில வரங்களுடனும்
சில சாபங்களுடனும்
ஏற்படுவதாகிறது





Saturday, May 22, 2010

வாழ்வாங்கு வாழ்வதாயின்....

எல்லா கடற்கரை நடையின் முடிவிலும்
நீளமாய் காலம்
நம்முன் நீண்டு போகும்.....................
மணல் மட்டும் மிஞ்சும் கடற்கரை!

என் ஊர்
அநாதை கிராமம்...............
என் தோட்டத்து மாமரம்
பழுத்து குலுங்குகிறது.
யாருக்கும் இல்லாமல்.................

அமைதியாய்
அனால் கடுமையாய் காடு.
கத்தும் காக்கை
உடைத்துப்போட்டது.
சிதறி அழும் மலை..................

சிதறிய துளிகளை
சேர்த்து வந்து அடிக்கி
வீடென்று சொன்னோம் நாம்!!!!!

கைகளை அடித்து விரித்து
அலைந்து திரியும் தும்பி.
யாரும் பிடித்து விடாதீர்கள்..........
அது மட்டும் தான் அங்கு உள்ளது!

வேனல்கால கனவுகள்.........
புதைந்து கிடக்கிறது..............!
தோண்டி எடுக்கத்தான் யாருக்கும் நேரமில்லை!!

காலசுழற்சியில்
அமைதியாய் அரை நொடி அழவேண்டும்
நேரம் இல்லை அதற்கும்!

என் கிராமத்து காதலர்கள்
பேசும் மௌன மொழிகளில்
ரத்தம் சொட்ட சொட்ட
மரித்துபோகிறது
செம்பரித்தி.................
யாருக்கும் சொல்லாமல் !

நானும் நீயும்
இங்கு வாழ்வாங்கு வாழ்கிறோம்!!!!!!!!!!!!!

Thursday, May 20, 2010

கனவுகள் நேரம்

இன்று கனவுகள் காணும் நேரம்
இருள் பிரிந்தும் பிரியாத
நீள் சாலை வெளியின்
பனிபோர்வை விலக்கும்
சூரியன்

நேற்றின் நிகழ்வுகளில்
வழிந்து போன வியர்வையின்
மிச்சம் சேகரிக்கும்
போர்வை

எழதுடிக்கும் மனமும்
சம்மதியா மனைவியின் கையும்
மின்விசிறியின் சுழற்சியில்
சிக்கி மரிக்கும் காலம்

கடந்து போகக்கடவது
எல்லாம் எப்போதும்

இறந்து நின்றது காலம்
விழிக்கவேயில்லை இன்னும் நான்

இது கனவுகள் காணும் நேரம்

Wednesday, April 28, 2010

இனி கவிதை காலம்.........

(அப்போது பள்ளிகல்வி முடிந்த சமயம். வீட்டில் பெரிதாக வேலை இருந்தாலும் ஒன்றும் பார்க்காத காலம். கமயுனிசம் - ஹிந்துத்வா என்று இரண்டுக்கும் இடையில் நேரம், பணம் - இல்லாமல் செலவழித்த காலம். இன்று மனம் மாறி போனது வேறு கதை. அனால் அப்போது நிறைய கவிதை கிடைத்தது என்னிடமிருந்து எனக்கே. 1997ல் எழுதிய கவிதை - ஒன்றும் பெரிதாக மாறவில்லை).

புரட்சி
இந்த நூற்றாண்டின் இறுதி புரட்சி.......
நடந்து முடிந்தது.

பூமி இரத்தத்தால் சிவந்து
குருதி வாடை குடல் குமட்டியது
அழுகிய பிணங்களை அள்ளி போட ஆள் இல்லை.....

ஆண்டுகள் கடந்து மனித இனம் மாறி இருந்தது

இனி இங்கே
முல்லை தேர் துறக்கும்
மயில் போர்வை மறுக்கும்
யாசகம் பெறுவது அசிங்கம் என்று எண்ணி
திருவோடுகள் தீ குளிக்கும்

வழி தவறிய கோவலனை
கண்ணகி விவாகரத்து செய்வாள்
மாதவிகள் கோவலனை கொலையும் செய்வர்.
கொலையும் செய்வாள் - தாசி

கம்ப ராமாயணமும் மணிமேகலையும்
திருக்குறளோடு சேர்த்து
வலைதளங்களில் சங்கம் முழங்கும்

அதிகாலை கழுதைகள் சுமை மறுக்கும்
மீறி ஏற்றினால் பள்ளிகள் எரிக்கப்படும்

இங்கு
மாசற்றதாய் காற்று
மழைத்துளி போல் நீர்
மரிக்காத மண்
மறந்து போன மதங்கள்.

நினைத்து பார்கையில்
நெஞ்சமெல்லாம் சுகானுபவம்.

விழித்து பார்கையில்.....................................
பாரதி சொல்கிறான்
" கனவு மெய்பட வேண்டும் "
அவன் இறந்து எழுபத்தாறு ஆண்டுகள்............